-
2 நாளாகமம் 9:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அதோடு, யானைத்தந்தத்தில் மிகப் பெரிய சிம்மாசனம் ஒன்றைச் செய்து, அதன்மீது சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார்.+ 18 அந்தச் சிம்மாசனத்துக்கு ஏறிப் போக ஆறு படிக்கட்டுகள் இருந்தன. அதனுடன் ஒரு தங்கக் கால்மணையும் இணைக்கப்பட்டிருந்தது. இருக்கையின் இரண்டு பக்கங்களிலும் கைப்பிடிகள் இருந்தன, ஒவ்வொரு கைப்பிடியின் பக்கத்திலும் ஒரு சிங்க உருவம்+ வைக்கப்பட்டிருந்தது. 19 அதோடு, ஆறு படிக்கட்டுகளிலும் இந்தப் பக்கம் ஒரு சிங்கம், அந்தப் பக்கம் ஒரு சிங்கம் என மொத்தம் 12 சிங்க உருவங்கள்+ வைக்கப்பட்டிருந்தன. வேறெந்த ராஜ்யத்திலும் இப்படிப்பட்ட சிம்மாசனம் செய்யப்படவில்லை.
-