20 ஆனாலும், உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. அந்த யேசபேலை+ நீ பொறுத்துக்கொள்கிறாய்; அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்கிறாள். பாலியல் முறைகேட்டில் ஈடுபடும்படியும்,+ சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடும்படியும் என் அடிமைகளுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைத் தவறாக வழிநடத்துகிறாள்.