21 அதன் பின்பு, இஸ்ரவேல் தேசம் முழுவதும் யெகூ இந்தச் செய்தியை அனுப்பினார். பாகாலின் பக்தர்கள் எல்லாரும் கூடிவந்தார்கள். ஒருவர்கூட வராமல் இருக்கவில்லை. அவர்கள் எல்லாரும் பாகால் கோயிலுக்குள்+ போனார்கள், அந்தக் கோயிலே பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.