-
தானியேல் 10:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 நான் மட்டும் தன்னந்தனியாக இருந்தேன். பிரமிப்பூட்டும் அந்தத் தரிசனத்தைப் பார்த்தவுடன், என் பலமெல்லாம் போய்விட்டது. கொஞ்சம்கூட தெம்பு இல்லாமல் துவண்டுபோனேன்.+ 9 பின்பு, அந்த மனிதர் பேசும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த சமயத்திலேயே குப்புற படுத்தபடி நன்றாகத் தூங்கிவிட்டேன்.+ 10 அப்போது, ஒரு கை என்னைத் தொட்டு எழுப்பியது.+ நான் என் கைகளையும் முழங்கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தேன்.
-