22 ராஜாவிடம் ‘தர்ஷீஸ்+ கப்பல்கள்’ இருந்தன. ஈராமின் கப்பல்களோடு சேர்ந்து இவையும் கடலில் சென்றன. மூன்று வருஷங்களுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, யானைத்தந்தம்,+ வாலில்லா குரங்குகள், மயில்கள் ஆகியவற்றை இந்தக் கப்பல்கள் கொண்டுவந்தன.
15 தேதான்+ ஜனங்கள் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். நீ நிறைய தீவுகளில் ஆட்களை வேலைக்கு வைத்து வியாபாரம் செய்தாய். அவர்கள் உனக்கு யானைத்தந்தங்களையும்+ கருங்காலி மரங்களையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.*