50 யோசபாத் இறந்த* பின்பு,+ அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது அவருடைய மூதாதையான ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோராம் ராஜாவானார்.+
3 நிறைய தங்கத்தையும் வெள்ளியையும் விலைமதிப்புள்ள பொருள்களையும் யூதா தேசத்தில் இருந்த மதில் சூழ்ந்த நகரங்களையும் அவர்களுடைய அப்பா அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.+ ஆனால், யோராம் மூத்த மகனாக இருந்ததால், அவருக்கு ராஜ்யத்தையே கொடுத்தார்.+