-
2 ராஜாக்கள் 23:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 கடவுளைப் புண்படுத்துவதற்காக, சமாரியா நகரங்களில் இருந்த ஆராதனை மேடுகளில் இஸ்ரவேலின் ராஜாக்கள் கட்டியிருந்த எல்லா கோயில்களையும் யோசியா இடித்துப்போட்டார்.+ பெத்தேலில் செய்தபடியே இங்கேயும் செய்தார்.+ 20 அந்த ஆராதனை மேடுகளில் இருந்த எல்லா குருமார்களையும் பலிபீடங்களின் மேல் கொன்றுபோட்டார். மனித எலும்புகளை அவற்றின்மேல் எரித்துப்போட்டார்.+ அதன் பின்பு, எருசலேமுக்குத் திரும்பினார்.
-