15 யெரொபெயாம் ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த 27-ஆம் வருஷத்தில், அமத்சியா ராஜாவின்+ மகனான அசரியா+ யூதாவின் ராஜாவானார்.+ 2 ராஜாவானபோது அவருக்கு 16 வயது; அவர் எருசலேமில் 52 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எக்கோலியாள், அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.