9 ஆனால், முன்பு செபுலோன் தேசத்துக்கும் நப்தலி தேசத்துக்கும் வந்த கொடிய காலத்தைப் போல அது கொடியதாக இருக்காது. அந்தத் தேசங்கள் அப்போது அற்பமாக நினைக்கப்பட்டன.+ ஆனால் பிற்காலத்தில், கடலை ஒட்டிய யோர்தான் பிரதேசத்திலே மற்ற தேசத்தார் குடியிருக்கிற கலிலேயா மாகாணத்தைக் கடவுள் உயர்த்துவார்.