-
1 ராஜாக்கள் 15:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 உடனே ஆசா, யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் மீதியிருந்த எல்லா வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து தன்னுடைய ஊழியர்களிடம் கொடுத்தார். அவற்றை தமஸ்குவில் குடியிருந்த சீரியா ராஜாவிடம்,+ அதாவது எசியோனின் பேரனும் தப்ரிமோனின் மகனுமான பெனாதாத்திடம், கொடுக்கச் சொன்னார். 19 அப்படிக் கொடுத்து அனுப்பும்போது, “என் அப்பாவும் உங்கள் அப்பாவும் செய்ததுபோல், நானும் நீங்களும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதனால், நான் அனுப்பியிருக்கிற தங்கத்தையும் வெள்ளியையும் அன்பளிப்பாக ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவான பாஷாவோடு நீங்கள் செய்திருக்கிற ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்படிச் செய்தால் அவர் எங்களைவிட்டுப் பின்வாங்கிப் போய்விடுவார்” என்று சொல்லச் சொன்னார்.
-