-
2 நாளாகமம் 24:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 மக்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவின் ஆலயத்தை அலட்சியம் செய்துவிட்டு, பூஜைக் கம்பங்களையும்* சிலைகளையும் வணங்க ஆரம்பித்தார்கள். இப்படிப் பாவம் செய்ததால் யூதாமீதும் எருசலேம்மீதும் கடவுள் மிகவும் கோபப்பட்டார். 19 அவர்கள் தன்னிடம் திரும்பிவருவதற்காக யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகளை மீண்டும் மீண்டும் அனுப்பினார். அவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்தார்கள். ஆனால், மக்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.+
-
-
2 நாளாகமம் 36:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
-