-
2 ராஜாக்கள் 21:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 மனாசே தான் உண்டாக்கிய உருவச் சிலையை, அதாவது பூஜைக் கம்பத்தை,* கடவுளின் ஆலயத்தில் வைத்தார்;+ அந்த ஆலயத்தைப் பற்றித்தான் தாவீதிடமும் அவருடைய மகன் சாலொமோனிடமும் யெகோவா இப்படிச் சொல்லியிருந்தார்: “இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேமிலும், இந்த ஆலயத்திலும், என் பெயரை என்றென்றும் நிலைநாட்டுவேன்.+
-
-
2 நாளாகமம் 34:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அவருடைய மேற்பார்வையில் பாகால்களின் பலிபீடங்களை மக்கள் இடித்துப்போட்டார்கள். அவற்றின் மேல்பகுதியில் இருந்த தூபபீடங்களை யோசியா உடைத்துப்போட்டார்; பூஜைக் கம்பங்களையும்* செதுக்கப்பட்ட சிலைகளையும் உலோகச் சிலைகளையும் உடைத்து தூள்தூளாக்கி, அவற்றுக்குப் பலி செலுத்திவந்த ஆட்களின் கல்லறைகளில் வீசியெறிந்தார்.+
-