7 அவர் சாலொமோனிடம், “என் கடவுளாகிய யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட நான் மனதார ஆசைப்பட்டேன்.+ 8 ஆனால் யெகோவா என்னிடம், ‘நீ பல பேரைக் கொன்றுபோட்டிருக்கிறாய், நிறைய போர் செய்திருக்கிறாய். இப்படி என் முன்னால் பல பேரைக் கொன்றுபோட்டதால் என் பெயருக்காக நீ ஆலயம் கட்ட வேண்டாம்.+