2 அப்போது அவர் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில்* நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் உண்மைக் கடவுளின் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார்.
3 “யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தை என் அப்பாவால் கட்ட முடியவில்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஏனென்றால், சுற்றியிருந்த எதிரிகள் எல்லாரையும் யெகோவாவின் துணையோடு வீழ்த்தும்வரை அவர் போர் செய்துகொண்டிருந்தார்.+