-
2 நாளாகமம் 7:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அன்றிரவு சாலொமோனின் கனவில் யெகோவா தோன்றி,+ “நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன். எனக்குப் பலி கொடுப்பதற்கான இடமாக இந்த ஆலயத்தைத் தேர்ந்தெடுத்தேன்.+ 13 மழை பெய்யாதபடி நான் வானத்தை அடைக்கும்போது, நிலத்தை அழிப்பதற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பும்போது, என் மக்களைத் தாக்க கொள்ளைநோயை அனுப்பும்போது 14 என் பெயரால் அழைக்கப்படும் என் மக்கள்+ தாழ்மையாக நடந்து+ என்னிடம் ஜெபம் செய்தால், பரலோகத்திலிருந்து அதைக் கேட்பேன்; தங்களுடைய பொல்லாத வழிகளைவிட்டு விலகி என்னைத் தேடினால்,+ அவர்களுடைய பாவத்தை மன்னிப்பேன், அவர்களுடைய தேசத்தைச் செழிப்பாக்குவேன்.+
-