13 கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார். அவர் கெஞ்சுவதைப் பார்த்து கடவுள் இரக்கப்பட்டார், கருணை காட்டச் சொல்லி அவர் மன்றாடியபோது அதைக் கேட்டார். அதனால், அவரை மறுபடியும் எருசலேமின் ராஜாவாக்கினார்.+ யெகோவாதான் உண்மையான கடவுள் என்பதை மனாசே அப்போது புரிந்துகொண்டார்.+