62 பின்பு, ராஜாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் சேர்ந்து யெகோவாவுக்கு முன்னால் ஏராளமான பலிகளைக் கொடுத்தார்கள்.+ 63 சாலொமோன் 22,000 மாடுகளையும் 1,20,000 ஆடுகளையும் சமாதான பலியாக+ யெகோவாவுக்குக் கொடுத்தார். இப்படி, ராஜாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் யெகோவாவுடைய ஆலயத்தின் அர்ப்பண விழாவை நடத்தினார்கள்.+