9 எகிப்தின் ராஜாவான சீஷாக் எருசலேம்மீது படையெடுத்து வந்தான்; யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும்+ அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டுபோனான். சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கக் கேடயங்கள் உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனான்.+