-
2 நாளாகமம் 28:5-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அதனால், அவருடைய கடவுளான யெகோவா அவரை சீரியா ராஜாவின் கையில் கொடுத்தார்.+ சீரியர்கள் அவரைத் தோற்கடித்து, ஏராளமான மக்களை தமஸ்குவுக்குப்+ பிடித்துக்கொண்டு போனார்கள். கடவுள் அவரை இஸ்ரவேல் ராஜாவின் கையிலும் கொடுத்தார். இஸ்ரவேல் ராஜா அவரைத் தோற்கடித்து, எக்கச்சக்கமான வீரர்களைக் கொன்று குவித்தார். 6 ரெமலியாவின் மகனான பெக்கா+ யூதாவிலிருந்த 1,20,000 தைரியமிக்க ஆண்களை ஒரே நாளில் கொன்றுபோட்டார். தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை விட்டு விலகியதால்தான் அவர்களுக்கு இந்த நிலைமை வந்தது.+ 7 ராஜாவின் மகனான மாசெயாவையும், அரண்மனையைக் கவனித்துக்கொண்ட அசரீக்காம் என்ற அதிகாரியையும், ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த எல்க்கானாவையும் எப்பிராயீமைச் சேர்ந்த சிக்ரி என்ற வீரர் கொன்றுபோட்டார். 8 அதோடு, யூதாவைச் சேர்ந்த தங்கள் சகோதரர்களில் 2,00,000 பேரை இஸ்ரவேலர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். அந்தக் கூட்டத்தில் பெண்களும் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்கள் எக்கச்சக்கமான பொருள்களைக் கைப்பற்றி சமாரியாவுக்குக்+ கொண்டுபோனார்கள்.
-