6 பாபிலோனிலிருந்து வந்த எஸ்றா, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா மோசேயின் மூலம் கொடுத்திருந்த திருச்சட்டத்தில் புலமை பெற்றிருந்தார்;+ அதை நகலெடுப்பவராகவும்* இருந்தார். அவருடைய கடவுளாகிய யெகோவா அவருக்குத் துணையாக இருந்ததால் அவர் கேட்ட எல்லாவற்றையும் ராஜா கொடுத்தார்.
2 அது ஏழாம் மாதம் முதல் நாள்.+ குருவாகிய எஸ்றா சபையாகக்+ கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், கேட்டு புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாகத் திருச்சட்டத்தை எடுத்துவந்தார்.