-
2 ராஜாக்கள் 17:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 இப்படி, அவர்கள் யெகோவாவுக்குப் பயந்தபோதிலும், எந்தத் தேசத்திலிருந்து பிடித்துவரப்பட்டார்களோ அந்தத் தேசத்து மக்களின் மதத்தை* பின்பற்றி, அவர்களுடைய தெய்வங்களை வழிபட்டார்கள்.+
34 முன்பு தாங்கள் பின்பற்றிய மதங்களைத்தான்* இன்றுவரை பின்பற்றுகிறார்கள். அவர்கள் யாரும் யெகோவாவை வழிபடுவதில்லை; யெகோவாவின் சட்டதிட்டங்களையும், நீதித்தீர்ப்புகளையும், திருச்சட்டத்தையும், இஸ்ரவேல் என்று அவர் பெயர் மாற்றிய யாக்கோபுடைய மகன்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் அவர்கள் யாரும் பின்பற்றுவதில்லை.+
-