24 “இஸ்ரவேலர்களிடம் நீ இப்படிச் சொல்: ‘ஏழாம் மாதம் முதலாம் நாளில் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும். எக்காளம் ஊதி அந்த நாளை அறிவிப்பு செய்ய வேண்டும்.+ அந்த நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.
27 “இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள் உங்களுக்குப் பாவப் பரிகார நாள்.+ அன்று பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். உங்களையே வருத்திக்கொண்டு,*+ யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும்.