7பின்பு, பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில்+ எஸ்றா*+ எருசலேமுக்குத் திரும்பி வந்தார். இவர் செராயாவின் மகன், செராயா+ அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின்+ மகன்,
6 பாபிலோனிலிருந்து வந்த எஸ்றா, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா மோசேயின் மூலம் கொடுத்திருந்த திருச்சட்டத்தில் புலமை பெற்றிருந்தார்;+ அதை நகலெடுப்பவராகவும்* இருந்தார். அவருடைய கடவுளாகிய யெகோவா அவருக்குத் துணையாக இருந்ததால் அவர் கேட்ட எல்லாவற்றையும் ராஜா கொடுத்தார்.