-
நெகேமியா 10:38, 39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 லேவியர்கள் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கும்போது ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் அவர்களோடு இருப்பார்கள். லேவியர்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து கடவுளுடைய ஆலயத்தின்+ சேமிப்பு* அறைகளில் வைப்பார்கள். 39 தானியம், புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகிய காணிக்கைகளை+ இஸ்ரவேலர்களும் லேவியர்களும் அங்கு கொண்டுவருவார்கள். அந்த அறைகளில்தான் ஆலயப் பாத்திரங்கள் வைக்கப்படும். சேவை செய்கிற குருமார்களும் வாயிற்காவலர்களும் பாடகர்களும் அங்குதான் தங்குவார்கள். நாங்கள் எங்களுடைய கடவுளுடைய ஆலயத்தை அலட்சியப்படுத்த மாட்டோம்”+ என்று சொன்னார்கள்.
-
-
மல்கியா 3:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 என்னுடைய ஆலயத்தில் எப்போதும் உணவு இருப்பதற்காக, நீங்கள் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகம்* முழுவதையும் அங்குள்ள சேமிப்பு அறைக்குக் கொண்டுவாருங்கள்.+ அப்போது, நான் வானத்தின் கதவுகளைத் திறந்து அளவில்லாத* ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிகிறேனா* இல்லையா என்று தயவுசெய்து என்னைச் சோதித்துப் பாருங்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
-