19 அதுமட்டுமல்ல, உண்மைக் கடவுள் ஒருவனுக்குச் சொத்துப்பத்துகளையும்+ அவற்றை அனுபவிக்கிற திறனையும் கொடுக்கும்போது, அதைத் தனக்குக் கிடைக்கும் பலனாக அவன் நினைக்க வேண்டும்; தன் கடின உழைப்பைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும். இது கடவுள் தரும் பரிசு.+
17 நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த* அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன,+ ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன;+ அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.+