-
தானியேல் 4:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 ராஜாவே, அதன் அர்த்தத்தை இப்போது விளக்குகிறேன். என் எஜமானாகிய ராஜாவுக்கு இப்படி நடக்க வேண்டுமென்பது உன்னதமான கடவுளின் தீர்ப்பு. 25 நீங்கள் மனிதர்களிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர்கள். மாடுகளைப் போலப் புல்லை மேய்வீர்கள். வானத்திலிருந்து பெய்யும் பனியில் நனைவீர்கள்.+ இப்படியே, ஏழு காலங்கள் உருண்டோடும்.+ கடைசியில், உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா என்றும், தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்+ என்றும் புரிந்துகொள்வீர்கள்.
-