உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 28:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 சாலொமோனே, என் மகனே, உன் அப்பாவின் கடவுளை நன்றாகத் தெரிந்துகொள், அவருக்கு முழு இதயத்தோடு+ சந்தோஷமாக* சேவை செய். யெகோவா எல்லாருடைய இதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்.+ மனதில் இருக்கிற ஒவ்வொரு யோசனையையும் நோக்கத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.+ நீ அவரைத் தேடினால், அவரைக் கண்டடைய உதவி செய்வார்.+ நீ அவரை விட்டுவிட்டால், அவரும் உன்னை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்.+

  • சங்கீதம் 62:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவாவே, மாறாத அன்பும் உங்களுடையதுதான்.+

      அவரவர் செயலுக்குத் தகுந்தபடி அவரவருக்கு நீங்கள் பலன் கொடுக்கிறீர்கள்.+

  • நீதிமொழிகள் 24:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நீ சொல்லலாம்.

      ஆனால், இதயங்களை* ஆராய்கிறவருக்கு உன் இதயத்தில் இருப்பது தெரியாதா?+

      உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாரே.

      அவனவன் செயலுக்குத் தகுந்த கூலியை அவர் கொடுப்பாரே.+

  • எரேமியா 32:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் யோசனைகள்* ஆச்சரியமானவை, உங்கள் செயல்கள் அற்புதமானவை.+ மனுஷனுடைய எல்லா வழிகளையும் நீங்கள் கவனிக்கிறீர்கள்.+ அவரவர் போகிற வழிக்கும் செய்கிற செயலுக்கும் ஏற்றபடி அவரவருக்குக் கூலி கொடுக்கிறீர்கள்.+

  • எசேக்கியேல் 33:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆனால் நீங்கள், ‘யெகோவா செய்வது அநியாயம்’+ என்று சொல்கிறீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, அவரவருடைய செயலுக்கு ஏற்றபடி அவரவருக்கு நான் தீர்ப்பு கொடுப்பேன்” என்றார்.

  • ரோமர் 2:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அப்போது, அவனவனுடைய செயல்களுக்குத் தக்க பலனை அவனவனுக்குத் தருவார்:+

  • 2 கொரிந்தியர் 5:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நாம் எல்லாரும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்பாக நிற்க வேண்டும். அப்போது, நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்துவந்த நல்லது கெட்டதுக்குத் தகுந்தபடி பலன் பெறுவோம்.+

  • கலாத்தியர் 6:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க* முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.+

  • 1 பேதுரு 1:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பாரபட்சம் இல்லாமல்+ அவரவருடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு கொடுக்கிற தகப்பனிடம் நீங்கள் ஜெபம் செய்வதால், தற்காலிகக் குடிமக்களாக வாழும் காலமெல்லாம் பயபக்தியோடு நடந்துகொள்ளுங்கள்.+

  • வெளிப்படுத்துதல் 22:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “‘இதோ! நான் சீக்கிரமாக வருகிறேன். அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்ப அவரவருக்குப் பலன் கொடுப்பேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்