உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 28:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 சாலொமோனே, என் மகனே, உன் அப்பாவின் கடவுளை நன்றாகத் தெரிந்துகொள், அவருக்கு முழு இதயத்தோடு+ சந்தோஷமாக* சேவை செய். யெகோவா எல்லாருடைய இதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்.+ மனதில் இருக்கிற ஒவ்வொரு யோசனையையும் நோக்கத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.+ நீ அவரைத் தேடினால், அவரைக் கண்டடைய உதவி செய்வார்.+ நீ அவரை விட்டுவிட்டால், அவரும் உன்னை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்.+

  • 2 நாளாகமம் 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால் அவர் ஆசாவிடம் போய், “ஆசா ராஜாவே! யூதா, பென்யமீன் மக்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் யெகோவாவின் பக்கம் இருக்கும்வரை அவர் உங்களுடன் இருப்பார்.+ அவரைத் தேடினால் அவரைக் கண்டடைய உங்களுக்கு உதவி செய்வார்.+ நீங்கள் அவரை விட்டுவிட்டால், அவரும் உங்களை விட்டுவிடுவார்.+

  • 2 நாளாகமம் 19:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பின்பு, யூதாவின் ராஜாவான யோசபாத் எருசலேமில் உள்ள தன்னுடைய அரண்மனைக்குப் பத்திரமாக* திரும்பி வந்தார்.+

  • 2 நாளாகமம் 19:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆனாலும், நீங்கள் செய்த நல்ல காரியங்களை அவர் கவனித்திருக்கிறார்.+ ஏனென்றால், நீங்கள் பூஜைக் கம்பங்களை* அழித்தீர்கள், உண்மைக் கடவுளைத் தேட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தீர்கள்”*+ என்று சொன்னார்.

  • ஏசாயா 55:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 வாய்ப்பு இருக்கும்போதே யெகோவாவைத் தேடுங்கள்.+

      அவர் உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும்போதே அவரைக் கூப்பிடுங்கள்.+

  • 1 பேதுரு 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்