20 அதனால் அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள். பின்பு, ரகசியமாக ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவரிடம் அனுப்பினார்கள். நீதிமான்களைப் போல நடித்து, அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைத்து,+ அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும் அவரை ஒப்படைப்பதற்காக அவர்களை அனுப்பினார்கள்.