19 பின்பு யெகோவா மோசேயிடம், “எகிப்தின் நீர்நிலைகளாகிய ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் மேல் கோலை நீட்டும்படி நீ ஆரோனிடம் சொல்.+ அப்போது எகிப்து தேசமெங்கும் உள்ள தண்ணீர் இரத்தமாக மாறும். மரப் பாத்திரங்களிலும் கல் தொட்டிகளிலும் உள்ள தண்ணீர்கூட இரத்தமாக மாறும்” என்றார்.