-
1 சாமுவேல் 16:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அதனால், ஈசாய் ஆள் அனுப்பி அவனை வரவழைத்தார். அவன் அழகான கண்களோடு செக்கச்செவேல் என்று இருந்தான், பார்ப்பதற்கு ரொம்பவும் லட்சணமாக இருந்தான்.+ அப்போது யெகோவா, “இவனைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவனை அபிஷேகம் செய்!”+ என்று சொன்னார். 13 உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+
-