21 அதற்கு தாவீது, “உன் அப்பாவுக்கும் அவருடைய வம்சத்துக்கும் பதிலாக என்னைத் தேர்ந்தெடுத்த யெகோவாவுக்கு முன்னால்தான் நான் ஆடிப்பாடி கொண்டாடினேன்; தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கு என்னைத் தலைவனாக்கியது யெகோவாதான்.+ அதனால், யெகோவாவுக்கு முன்பாக நான் மகிழ்ச்சியோடு ஆடிப்பாடுவேன்;
8 அதோடு, நீ என் ஊழியன் தாவீதிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னைக்+ கூட்டிக்கொண்டு வந்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+