63 கடவுளே, நீங்கள்தான் என் கடவுள். நான் எப்போதும் உங்களைத் தேடுகிறேன்.+
உங்களுக்காகத் தவிக்கிறேன்.+
தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் தேசத்திலே,
உங்களுக்காகத் தவித்துத் தவித்துத் துவண்டு விழுகிறேன்.+
2 பரிசுத்த இடத்தில் நான் உங்களைப் பார்த்தேன்.
உங்களுடைய பலத்தையும் மகிமையையும் கண்டேன்.+