2மாகாணத்தை* சேர்ந்த அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சார் ராஜா பாபிலோனுக்குப்+ பிடித்துக்கொண்டு போயிருந்தான்.+ அவர்கள் அங்கிருந்து எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பி வந்து அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+
25 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் பிள்ளைகளை நான் விடுதலை செய்வேன்.+ இஸ்ரவேல் ஜனங்கள் எல்லார்மேலும் இரக்கம் காட்டுவேன்.+ என்னுடைய பரிசுத்த பெயரை வைராக்கியத்தோடு கட்டிக்காப்பேன்.+