-
அப்போஸ்தலர் 2:25-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அவர் இப்படிச் சொல்வதாக தாவீது குறிப்பிட்டிருக்கிறார்: ‘யெகோவாவை* எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்; அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது. 26 அதனால், என் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கிறது, என் நாவு மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறது, நான் நம்பிக்கையோடு வாழ்வேன்; 27 ஏனென்றால், நீங்கள் என்னைக் கல்லறையில்* விட்டுவிட மாட்டீர்கள்; உங்களுக்கு உண்மையாக* இருப்பவரின் உடல் அழிந்துபோக விடமாட்டீர்கள்.+ 28 வாழ்வின் வழிகளை எனக்குக் காட்டியிருக்கிறீர்கள், உங்களுடைய சன்னிதியில் என்னை மிகுந்த சந்தோஷத்தால் நிரப்புவீர்கள்.’+
-