5 நீங்கள் என் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து என் ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால், மற்ற எல்லா ஜனங்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக+ இருப்பீர்கள். ஏனென்றால், இந்த முழு பூமியும் எனக்குத்தான் சொந்தம்.+
9 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உண்மைக் கடவுள். அவர் நம்பகமானவர். தன்னை நேசித்து தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடம் ஆயிரம் தலைமுறை வரைக்கும் மாறாத அன்பைக் காட்டி, ஒப்பந்தத்தைக் காப்பவர்.+ இதெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்.