10 ஆனால், கேசேரில் வாழ்ந்துவந்த கானானியர்களை எப்பிராயீமியர்கள் துரத்தியடிக்கவில்லை.+ அதனால், கானானியர்கள் இன்றுவரை அவர்களோடு குடியிருந்து,+ அவர்களுக்குக் கொத்தடிமைபோல் வேலை செய்துவருகிறார்கள்.+
12 இந்த நகரங்களை மனாசே வம்சத்தாரால் சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், கானானியர்கள் அந்தத் தேசத்தைவிட்டுப் போகாமல் அங்கேயே பிடிவாதமாகக் குடியிருந்தார்கள்.+
21 ஆனால், பென்யமீன் கோத்திரத்தார் எருசலேமில் குடியிருந்த எபூசியர்களைத் துரத்தியடிக்கவில்லை. அதனால், எபூசியர்கள் இன்றுவரை பென்யமீன் கோத்திரத்தாருடன் எருசலேமில் வாழ்ந்துவருகிறார்கள்.+