9 முற்றுகை போடப்பட்ட நகரத்துக்கு யார் என்னை அழைத்துக்கொண்டு போவார்?
ஏதோம்வரை யார் என்னை வழிநடத்துவார்?+
10 கடவுளே, நீங்கள்தானே இதைச் செய்வீர்கள்?
ஆனால், எங்களை ஒதுக்கிவிட்டீர்களே!
எங்களுடைய படைகளுக்குத் துணையாக வருவதை நிறுத்திவிட்டீர்களே!+
11 இக்கட்டில் தவிக்கும் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
ஏனென்றால், மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.+
12 கடவுள் எங்களுக்குப் பலம் கொடுப்பார்.+
எங்களுடைய எதிரிகளை அவர் மிதித்துப் போடுவார்.+