-
மத்தேயு 27:41-43பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
41 அதேபோல், முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பெரியோர்களும் ஒன்றுசேர்ந்து அவரைக் கேலி செய்து,+ 42 “மற்றவர்களைக் காப்பாற்றினான், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவன் இஸ்ரவேலின் ராஜாவாம்;+ இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு* கீழே இறங்கி வருகிறானா பார்ப்போம், பிறகு இவனை நம்புவோம். 43 இவன்தான் கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறானே; ‘நான் கடவுளுடைய மகன்’+ என்றுகூட சொன்னானே, அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்போது இவனைக் காப்பாற்றட்டும்”+ என்று சொன்னார்கள்.
-
-
லூக்கா 23:35, 36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தார்கள். அதிகாரிகளோ அவரை ஏளனம் செய்து, “மற்றவர்களைக் காப்பாற்றினானே, இவன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவாக இருந்தால், இப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்”+ என்று சொன்னார்கள். 36 படைவீரர்கள் அவர் பக்கத்தில் போய் அவருக்குப் புளிப்பான திராட்சமதுவைக் கொடுத்து,+
-