7 ஆனால் யெகோவா சாமுவேலிடம், “இவன் தோற்றத்தையோ உயரத்தையோ பார்க்காதே.+ நான் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. மனிதன் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்”+ என்று சொன்னார்.