38 உங்களைவிட பலம்படைத்த மாபெரும் தேசங்களை உங்கள் முன்னால் துரத்தியடித்தார். அவர்களுடைய தேசங்களை உங்களுக்குச் சொத்தாகக் கொடுப்பதற்கு அப்படிச் செய்தார். அவர் நினைத்தபடியே இன்று நடந்துவருகிறது.+
12 நீங்கள் அங்கு போவதற்கு முன்பே அவர்களை விரக்தியடைய* வைத்தேன். எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களைப் போலவே இவர்களும் விரக்தியடைந்து, உங்கள் முன்னாலிருந்து ஓடிப்போனார்கள்.+ வாளாலோ வில்லாலோ நீங்கள் இவர்களைத் தோற்கடிக்கவில்லை.+