15 சுத்தமான தங்கத்தைக் கொடுத்து அதை வாங்க முடியாது.
எவ்வளவு வெள்ளி கொடுத்தாலும் அது கிடைக்காது.+
16 ஓப்பீரின் தங்கத்தைக் கொடுத்து அதை வாங்க முடியாது.+
அபூர்வமாகக் கிடைக்கிற கோமேதகத்தையும் நீலமணிக் கல்லையும் கொடுத்தால்கூட அது கிடைக்காது.
17 தங்கமும் விலை உயர்ந்த கண்ணாடியும் அதன் பக்கத்தில் வர முடியாது.
சொக்கத்தங்கத்தில் செய்த பாத்திரத்தைக் கொடுத்தாலும் அது கிடைக்காது.+
18 பவளமும் படிகக்கல்லும் அதன் பக்கத்தில் நெருங்க முடியாது.+
பை நிறைய இருக்கிற முத்துக்களைவிட ஞானம் ரொம்பவே மதிப்புள்ளது.