3 உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல்,+ அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கிற* விசுவாசத்தின்படியே+ எண்ண வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையால் இதை உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்.