9 இளைஞனே, இளமைக் காலத்தில் சந்தோஷமாக இரு. வாலிப வயதில் உன் இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கட்டும். உன் இதயம் சொல்கிற வழிகளில் போ, உன் கண் போகிற போக்கில் போ. ஆனால், அதற்கெல்லாம் நீ உண்மைக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதே.+
36 நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் தாங்கள் பேசுகிற ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்;+37 ஏனென்றால், உங்களுடைய வார்த்தைகளை வைத்தே நீங்கள் நீதிமான்களா குற்றவாளிகளா என்பதைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்று சொன்னார்.
31 ஏனென்றால், தான் நியமித்த ஒரு மனுஷர் மூலம் இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.+ இறந்துபோன அந்த மனுஷரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனுஷர்களுக்கும் கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்.
10 நாம் எல்லாரும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்பாக நிற்க வேண்டும். அப்போது, நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்துவந்த நல்லது கெட்டதுக்குத் தகுந்தபடி பலன் பெறுவோம்.+