31 பின்பு தாவீது யோவாபையும் அவரோடிருந்த மக்கள் எல்லாரையும் பார்த்து, “உங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, துக்கத் துணியை கட்டிக்கொள்ளுங்கள்; அப்னேருக்காக அழுது புலம்புங்கள்” என்று சொன்னார். அப்னேரின் பாடையைத் தூக்கிக்கொண்டு போனபோது, அதன் பின்னால் தாவீது ராஜாவும் நடந்துபோனார்.