3 யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் அவர் சந்தோஷப்படுவார்.+
கண்ணால் பார்ப்பதை வைத்து தீர்ப்பு சொல்ல மாட்டார்.
காதால் கேட்பதை வைத்து கண்டிக்க மாட்டார்.+
4 பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
தாழ்மையானவர்களின் சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார்.
பூமியைத் தன் வாயின் கோலால் தாக்குவார்.+
கெட்டவர்களைத் தன் வாயின் சுவாசத்தால் கொன்றுபோடுவார்.+