-
எசேக்கியேல் 22:20-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 வெள்ளியையும் செம்பையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் பற்றியெரிகிற உலையில் எப்படி ஒன்றாகப் போட்டு, ஊதி, உருக்குவார்களோ அப்படியே நான் பற்றியெரிகிற என்னுடைய கோபத்தினால் உங்களை ஒன்றாகக் கொண்டுவந்து, ஊதி, உருக்குவேன்.+ 21 நான் உங்களை ஒன்றுகூட்டி, என்னுடைய ஆக்ரோஷத் தீயை உங்கள்மேல் ஊதுவேன்.+ நீங்கள் நகரத்தில் உருக்கப்படுவீர்கள்.+ 22 வெள்ளி எப்படி உலையில் உருக்கப்படுகிறதோ அப்படியே நீங்கள் நகரத்தில் உருக்கப்படுவீர்கள். அப்போது, யெகோவாவாகிய நான்தான் உங்கள்மேல் கோபத்தைக் கொட்டினேன் என்று தெரிந்துகொள்வீர்கள்’” என்றார்.
-