-
நெகேமியா 9:34, 35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 எங்கள் ராஜாக்களும் அதிகாரிகளும் குருமார்களும் முன்னோர்களும் உங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, உங்களுடைய கட்டளைகளையும் எச்சரிப்புகளையும்* காதுகொடுத்துக் கேட்கவில்லை. 35 அவர்கள் தங்களுடைய ராஜ்யத்தில் வாழ்ந்து, நீங்கள் அள்ளிக்கொடுத்த நன்மைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்த காலத்திலும் சரி, நீங்கள் தந்த வளமான, விசாலமான தேசத்தில் குடியிருந்த காலத்திலும் சரி, உங்களுக்குச் சேவை செய்யவோ+ கெட்ட பழக்கங்களைவிட்டு விலகவோ இல்லை.
-
-
தானியேல் 9:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 யெகோவாவே, உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் எங்களுக்கும் எங்கள் ராஜாக்களுக்கும் தலைவர்களுக்கும் முன்னோர்களுக்கும் அவமானம்தான் மிஞ்சியிருக்கிறது.
-