உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 4:17-21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஏசாயா தீர்க்கதரிசியின் சுருள் அவரிடம் கொடுக்கப்பட்டது; அந்தச் சுருளை அவர் விரித்து, 18 “யெகோவாவின்* சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நல்ல செய்தியைச் சொல்ல அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்.* கைப்பற்றப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காகவும்,+ 19 யெகோவாவின்* அனுக்கிரகக் காலத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பினார்”+ என்று எழுதப்பட்டிருந்த பகுதியை எடுத்து வாசித்தார். 20 அதன் பின்பு, அந்தச் சுருளைச் சுருட்டி ஜெபக்கூடப் பணியாளனிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தார்; அங்கிருந்த எல்லாருடைய கண்களும் அவர்மேல்தான் இருந்தன. 21 பின்பு அவர் பேச ஆரம்பித்து, “இப்போது நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறிவிட்டது”+ என்று சொன்னார்.

  • லூக்கா 7:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதன் பின்பு அவர் அந்தச் சீஷர்களிடம், “நீங்கள் பார்த்ததையும் கேட்டதையும் யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்: பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள்,+ நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள்,+ இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி சொல்லப்படுகிறது.+

  • அப்போஸ்தலர் 26:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இந்தத் தேசத்தாரிடமும் மற்ற தேசத்து மக்களிடமும் நான் உன்னை அனுப்புவேன்,+ அவர்களால் வரும் ஆபத்துகளிலிருந்து உன்னைக் காப்பாற்றுவேன். 18 நீ அவர்களை இருளிலிருந்து+ ஒளியிடமும்+ சாத்தானின் பிடியிலிருந்து+ கடவுளிடமும் திருப்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்க வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் என்மேல் விசுவாசம் வைத்து பாவங்களிலிருந்து மன்னிப்பையும்,+ புனிதமாக்கப்பட்டோருக்குரிய சொத்தையும் பெறுவார்கள்’ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்