-
லூக்கா 1:30-35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 அதனால் தேவதூதர் அவளிடம், “மரியாளே, பயப்படாதே; நீ கடவுளுக்குப் பிரியமானவள். 31 இதோ! நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்;+ அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்.+ 32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+ 33 அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது”+ என்று சொன்னார்.
34 அப்போது மரியாள், “இது எப்படி நடக்கும்? நான் கன்னிப்பெண்ணாக இருக்கிறேனே”*+ என்றாள். 35 அதற்கு அவர், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்;+ உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும்,+ கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.+
-